3200 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதன் உண்ட ‘பாலாடைக் கட்டி’ கண்டுபிடிப்பு

பண்டைய எகிப்திய சமாதி ஒன்றை ஆய்வு செய்துவரும் தொல்பொருள் ஆய்வாளர்கள், அந்த கல்லறையில் இருந்த ஜாடி ஒன்றில் பாலாடைக் கட்டியின் படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பாலாடைக் கட்டி படிமங்களில் இதுவே மிகவும் பழையது என அவர்கள் நிரூபித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்திய உயரதிகாரியான தஹ்மெஸின் கல்லறையில் சில உடைந்த ஜாடிகளை கண்டுபிடித்தனர். அதில் இறுக்கமான வெள்ளை திடப் பொருளொன்று இருந்தது. அதனை ஆய்வு செய்ததில் அந்த பாலாடைக் கட்டியானது 3200 ஆண்டுக்கு முந்தைய பழமையான பாலாடைக் கட்டி என்று தெரியவந்துள்ளது. -BBC_Tamil