இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான லம்போக்கில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ரிஞ்சானி மலைப்பகுதி அருகே மையம் கொண்ட இந்த நிலநடுக்கம்,6.3 ரிக்டர் அளவில் பதிவானது. கிழக்கு லம்போக்கின் தென்மேற்கு பகுதியிலுள்ள பெலான்டிங் டவுனை மையமாக கொண்டு சுமார் 7 கி.மீ. மையத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகளிலிருந்த மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஏற்கனவே, இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு 430 பேர் பலியான நிலையில்,மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை.
-dailythanthi.com