குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் பொலிசுக்கு பதவி உயர்வு..

அர்ஜென்டினாவில் ஆதரவற்ற குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீசை அழைத்து துணை அதிபர் பாராட்டி பதவி உயர்வு அளித்துள்ளார்.

அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி செலஸ் டீ ஜேக்லின் அயிலா. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகள் ஆஸ்பத்தியில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

அப்போது ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த குழந்தை பசியால் அழுதது. யாரும் அதை கவனிக்கவில்லை.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி செலஸ்டீ அக்குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்தார்.

இந்த விவகாரம் அர்ஜென்டினாவின் துணை அதிபர் கிறிஸ்டியின் ரிட்டான் டோவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் செலஸ்டீயை அழைத்து பாராட்டினார்.

மேலும் அவருக்கு போலீஸ் அதிகாரியில் இருந்து சார்ஜென்டாக பதவி உயர்வு அளித்தார்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது குறித்து செலஸ்டீ கூறும் போது “அந்த குழந்தை அழுதது என் ஆன்மாவை உடைய செய்தது. எனவே நான் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பு யோசிக்கவில்லை” என்றார்.

-athirvu.in