வாஷிங்டன் டிசி, ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதில் பாக்கிஸ்தான் ஒரு சந்தேகத்திற்குரிய பங்கைக் கொண்டுள்ளது என மூத்த அமெரிக்க இராணுவக் கர்னல் , லாரன்ஸ் செலின் தெரிவித்து உள்ளார்.
ஆப்கானிஸ்தான், வடக்கு ஈராக் மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் மனிதாபிமானப் பணியில் பணியாற்றியவர் செலின்,
லாரன்ஸ் செலின் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க குண்டுவீச்சு தொடங்கிய பின்னர், அக்டோபர் 2001 ல் தலிபான் போராளிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான் ஐஎஸ்ஐ வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
அப்போதைய பாகிஸ்தானிய ஜனாதிபதி ஜெனரல் பெர்வெஸ் முஷாரஃப் ஐ.எஸ்.ஐ. இயக்குனர் லெப்டினென்ட் ஜெனரல் மஹ்மூத் அகமது மற்றும் இராணுவத்தின் பிற உயர்மட்டக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தலிபான் மற்றும் அல் கொய்தாவிற்கு எதிரான யுத்தம் அனைத்திலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உதவாது என்று வாதிட்டார்.
பாகிஸ்தான் இரட்டிப்பு நிலை பதினேழு வருடங்கள் தொடர்ந்தது. இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளில் பில்லியன் கணக்கான டாலர்களை ஏற்றுக் கொண்டாலும், ஆப்கானிஸ்தானில் தலிபான், ஹக்கானி நெட்வொர்க் மற்றும் இதர பயங்கரவாத குழுக்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் அமெரிக்காவை எதிர்க்கிறது என கூறி உள்ளார்.
-dailythanthi.com