தேங்காய் எண்ணெய் சுத்தமான விஷம் என அமெரிக்க ஹார்வார்ட் பல்கலைகழக பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறிய கருத்தால் மருத்துவ உலகில் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
ஜெர்மனியின் பிறிபேர்க் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற கருந்தரங்கில் உரையாற்றி பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து கொள்ளும் சுத்தமானவிஷமெனக்குறிப்பிட்டார்.
பன்றிக்கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் அதிக கொழுப்பு மிகுந்த உணவு பொருட்களை விட தேங்காய் எண்ணெய் மோசமானது. தேங்காய் எண்ணெய் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படும்சதவீதம் மிகக் குறைவு என அவர் அடித்துச்சொன்னார்.
தேங்காய் எண்ணெய் குறித்து உங்களை நான் எச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும். நீங்கள் சாப்பிடும் உணவு பொருட்களில் மிகவும் மோசமானது தேங்காய் எண்ணெய் எனவும் அவர் கூறினார்.
தேங்காய் எண்ணெயை சுத்தமான விஷம் என பேராசிரியர் கரின் மிஷெல்ஸ் கூறிய கருத்தால் மருத்துவ உலகில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
கரின் மிஷெல்ஸ் கூறுவதைபோல தேங்காய் எண்ணெய் அவ்வளவு விஷம் அல்ல என ஒருதரப்பும் அவர் கூறுவதில் ஆதாரம் உள்ளதாக மறுதரப்பு வாதிடுகின்றன.
தேங்காய் எண்ணெயில் கொழுப்பு இருப்பதால் மக்கள் அதனை உணவில் சேர்த்து கொள்வதில் கவனமாக இருக்க வேண்டுமென்றாலும் அது விஷம் அல்ல என சில மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
அமெரிக்காவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புக்களில் 72 விதமான அமெரிக்கர்கள் தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமானதாக தாம் நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் இந்தியாவின் தென் மாவட்டங்கள் உட்பட உலகின் பல இடங்களில் தேங்காய் எண்ணெய் உணவுக்காகவும், முக பொலிவு சார்ந்த அழகு பொருட்களிலும் பயன்படுத்தப்படும் நிலையில் அதனை சுத்தமான விஷம் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறி இருப்பது தொடர்ந்தும் சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.
-athirvu.in