உங்கள் கருத்து: வழக்குரைஞர்களுடன் மக்களும் ஊர்வலத்தில் செல்ல வேண்டும்

“வழக்குரைஞர்களே நீங்கள் எடுத்தது நல்ல முடிவு. அனைத்து மலேசியர்களும் அந்த ஊர்வலத்தில் வழக்குரைஞர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். பெர்சே-யும் அவர்களுடன் செல்ல வேண்டும்.”

கூடும் மசோதாவை ஆட்சேபித்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர்

இக்குவினோக்ஸ்: “எதிர்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய சட்டம் அல்ல அது. நாம் அதற்கு எதிராக நடக்க வேண்டும். அதனை எதிர்க்க நம் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அந்த மசோதா சட்டமானால் நவீனமடையாத, முன்னேற்றம் காணாத நாட்டையே நாம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்வோம்,” என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறியுள்ளார்.

அந்த எதிர்காலத் தலைமுறைகளில் பிரதமர் நஜிப் ரசாக்கின் பிள்ளைகளும் அம்னோபுத்ராக்களின் பிள்ளைகளும் அடங்குவர். அமைதியாகக் கூடும் மசோதாவை எதிர்ப்பவர்களைப் போன்று அவர்களுடைய பிள்ளைகளின் சுதந்திரமும் பாதிக்கப்படும்.

தாங்கள் எப்போதும் அதிகாரத்தில் இருப்போம். அந்த ஒடுக்குமுறைச் சட்டம் தங்களைத் தாக்காது என என்னும் அளவுக்கு அவர்கள் குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டவர்களா?

ரூபன்: வழக்குரைஞர்களே, உங்களைக் கண்டு நான் பெருமை அடைகிறேன். சட்டக் கல்வியைப் பெறுவது என சரியான முடிவு செய்துள்ள என் புதல்வன் குறித்தும் நான் பெருமை அடைகிறேன். 

நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கம். மக்கள் போராளிகள்.

நானும் ஊர்வலத்தில் சேர்ந்து கொள்ள விரும்பிகிறேன். பெர்சே, சுஹாக்காம், சுவாராம் போன்ற அமைப்புக்கள் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அபத்தமான அந்தச் சட்டம் மீது பொது மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க முடியும்.

சரவாக்கியன்_3ff9:  இந்த முறை வழக்குரைஞர்களுடன் மற்றவர்களும் கலந்து கொள்வர். வழக்குரைஞர்கள் முழுமூச்சாக அதில் ஈடுபாடு காட்டி முழு அளவில் பங்கு பெறுவர் என நம்புவோம். மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர்.

புன்னகை:  வழக்குரைஞர்களே, நீங்கள் எடுத்தது நல்ல முடிவு. அனைத்து மலேசியர்களும் அந்த ஊர்வலத்தில் வழக்குரைஞர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். பெர்சே-யும் அவர்களுடன் செல்ல வேண்டும்.

தே தாரேக்: உறுதியான போக்கை எடுத்த வழக்குரைஞர் மன்றத்துக்கு பாராட்டுக்கள். பிரதமர் குறித்து மலேசியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்தின் இந்த ஏமாற்று வேலையை மக்கள் மறக்க மாட்டார்கள்.

பிரதமர் மீது மக்கள் குறிப்பாக இளம் மலேசியர்கள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து சரிகிறது. காரணம் உண்மை அம்பலமாகி விட்டது. சீர்திருத்தவாதியைப் போல பிரதமர் பாசாங்கு செய்கிறார். உத்துசான் மலேசியாவில் வெளியாகும்-வெறுப்பைத் தூண்டுகிற அனைத்துக் கட்டுரைகளுக்கும் பின்னணியில் இருப்பது யார் என்பதும் இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

நியாயத்துக்குப் போராடும் அந்த வழக்குரைஞர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம். அவர்கள் அனைத்து குடிமக்களுடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போராடுகின்றனர்.

அம்பிகா: பர்மா கூட சாலை ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கிறது

ஜோசபின்: 54 ஆண்டு கால பிஎன் ஆட்சிக்குப் பின்னர் மலேசியா இந்த நிலைக்கு வந்துள்ளது. -பர்மாவுடன் ஒப்பிடும் போது கூட நாம் சுதந்திரம் குறைந்த நாடாகத் திகழ்கிறோம்.

உலகில் அதிலும் இதிலும் பெரிய, தலைசிறந்த நாடு என தம்பட்டம் அடித்துக் கொள்வதை மலேசியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

மலேசியர்கள் சிந்திக்கத் தெரியாத முட்டாள்களைப் போல நடத்தப்படும் போது பெருமையடித்துக் கொள்வதற்கு என்ன இருக்கிறது?

டிகேசி: புதிய பர்மா நான்கு இடங்களில்- அரசாங்கக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தூதரகங்கள்- ஆகியவற்றுக்கு அருகில் மட்டுமே அமைதியான கூட்டங்கள் நடத்தப்படுவதற்குத் தடை விதிக்கிறது.

அதற்கு நேர்மாறாக நமது உத்தேச மசோதாவில்- அணைகள், நீர் தேக்கங்கள், நீர் பிடிப்புப் பகுதிகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், தீயணைப்பு நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொதுப் போக்குவரத்து முனையங்கள், துறைமுகங்கள், கால்வாய்கள், பாலங்கள், கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள், பாலர் பள்ளிகள், பள்ளிக்கூடங்கள்,  சாலைகள் ஆகிய இடங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் காடுகளில் மட்டுமே நாம் அமைதியாக ஒன்று கூட முடியும் எனத் தோன்றுகிறது.

கொம்பாஸ்: நஜிப்பை ஆய்வுச் சுற்றுலாவுக்கு பர்மாவுக்கு அனுப்ப வேண்டும்.

அவதார் 111: நமது ஜனநாயகத்துக்கு அளவுகோலாக பர்மாவைத்தான் நாம் இனிமேல் பயன்படுத்த வேண்டும். மலேசியாவுக்கு அதுதான் வழியா?

TAGS: