சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதி விபத்து..

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது விண்கல் மோதியதால் ஏற்பட்ட விபத்தை சரிசெய்யும் பணியில் விண்வெளி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விண்வெளியில் உலவும் நட்சத்திரத்தில் இருந்து வெடித்து சிதறிய விண்கல் துகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் மீது மோதியது. இந்த மோதலினால் விண்வெளி ஆய்வு மையத்தில் சிறு துளை உருவானது. இதனை கண்டறிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதனை முதற்கட்டமாக அடைத்துவிட்டு, தற்போது முழுமையாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த துளை கண்டறியப்பட்டவுடன், விண்வெளி வீரர் அலெக்ஸ் தனது விரல் மூலம் அந்த துளையை அடைத்தபடி, அடுத்தகட்ட பணியை செய்ய சக வீரர்களிடம் கோரியுள்ளார்.

2 மி.மீ அளவில் ஏற்பட்ட துளை கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் 18 நாட்களில் ஆராய்ச்சி மையத்தில் இருந்த காற்று வெளியேறி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் துளையை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

-athirvu.in