கடந்த 26ம் திகதி அக்பானிஸ்தானில் அன் நாட்டுக்கு பொறுப்பாக இருந்த ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டார், என்பது நாம் அறிந்த விடையம். ஆனால் எவ்வாறு அவர் கொல்லப்பட்டார் என்பது தொடர்பான துல்லியமான தகவல் இன்று வெளியாகியுள்ளது. அவரோடு சேர்ந்து ஐ.எஸ் இயக்கத்தின் மிக முக்கியமான 10 தளபதிகளும் கொல்லப்பட்டார்கள். இது இந்த இயக்கத்திற்கு விழுந்த பெரும் இடியாக கருதப்படுகிறது. காபூல் நகரில் இருந்து கிழக்கே உள்ள மலைத்தொடர் ஒன்றில் உள்ள அடிவாரத்தில் அமைந்துள்ள சாதாரண வீடு ஒன்றில் தலைவர் அபு சாட் மறைந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீடு என்பதனால் சுற்றியுள்ள 3 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு ஆங்காங்கே ஐ.எஸ் தீவிரவாதிகள் தமது தலைவரை பாதுகாக்க என பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார்கள்.
ஆனால் பிரித்தானியாவின் SAS என்னும் ரகசிய அதிரடிப்படையை சேர்ந்த சில உறுப்பினர்கள் சுமார் அரைக் கிலோமீட்டர்(500m) தவண்டே சென்று, மலைப் பகுதியில் நிலைகொண்டு இருந்துள்ளார்கள். அவர்கள் தமது இடத்தை விட்டு 48 மணி நேரமாக அசையவில்லை. ஒரே இடத்தில் சிலை போல கிடந்து, வீட்டை அதி நவீன கருவிகள் கொண்டு நோட்டமிட்டு வந்துள்ளார்கள். அங்கே முக்கியமான தளபதிகள் இருப்பது அவர்களுக்கு தெரியும். ஆனால் ஐ.எஸ் தலைவர் அபு சாட் உள்ளே இருக்கிறாரா என்பது தான் சந்தேகமாக இருந்துள்ளது. ஆனால் 26ம் திகதி இரவு அபு சாட் வீட்டினுள் இருப்பதையும். அவர் பேசுவதையும் தூரத்தில் இருந்தே ஒட்டுக் கேட்ட பிரித்தானிய படைகள். அதனை உறுதிசெய்துள்ளார்கள்.
அபு சாட் தங்கியிருந்த வீட்டை நோக்கி ஒரு விதமான புற ஊதக் கதிர்களை செலுத்தி(அல்-ரா வைலட்) தாக்குதல் நடத்த ஏதுவான சூழ் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை அடுத்து கடு கதி வேகத்தில் வந்த அமெரிக்க போர் விமானம் புற ஊதாக் கதிர்களை தொடர்ந்து சென்று தாக்க வல்ல அதி சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்றை வானில் இருந்து(35,000 அடி உயரத்தில் இருந்தே) ஏவியது.
இதனால் தாக்குதல் விமானத்தின் ஓசை நிலத்தில் உள்ள எவருக்கும் பெரிதாக கேட்க்க வாய்ப்பில்லை. சீறிப்பாய்ந்த ஏவுகணை துல்லியமாக அபு சாட் தங்கியிருந்த வீட்டை தாக்கி அழிக்கவே. உள்ளே இருந்த 11 பேரும் இறந்து போனார்கள். இது போக காவலுக்கு அருகில் இருந்த மேலும் சில , ஐ.எஸ் பயங்கரவாதிகளும் இறந்து போயுள்ளார்கள் என , துல்லியமான தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மிகவும் ரகசியமான முறையில் குறித்த பிரித்தானிய SAS படையினருக்கு அமெரிக்கா, மிகப் பெரிய ராணுவ விருதை இன்று வழங்கி கெளரவித்துள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
-athirvu.in