ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள மல்யுத்த கிளப் ஒன்றில் நடந்த இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி ஆகியுள்ளனர் மற்றும் 70 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
முதலில் ஒரு தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்க செய்ததில் நான்கு பேர் பலியாகினர். காரில் இருந்த இரண்டாவது குண்டுதாரி அவசர சேவையகத்தை இலக்கு வைத்து தாக்கினார்.
டொலோ தொலைக்காட்சியை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களும் இந்த குண்டுவெடிப்பில் பலியானார்கள். -BBC_Tamil

























