பிரான்ஸ் அரசால் புலம்பெயர் அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

எப்படியாவது பிரித்தானியாவுக்கு சென்றுவிடவேண்டும் என்ற நோக்கத்தில் காத்திருந்த 500 அகதிகளை பிரான்ஸ் பொலிசார் முகாம் ஒன்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.

ஆங்கிலக் கால்வாய் ஓரமாக Dunkirk பகுதியில் எப்படியாவது லொறிகளிலோ அல்லது படகுகளிலோ ஏறி பிரித்தானியாவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த சுமார் 500 அகதிகளை பொலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சுமார் 200 பொலிசார் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அந்த முகாமிலிருந்த அகதிகளில் 95 சதவிகிதம் பேரும் ஈராக்கைச் சேர்ந்த குர்திஷ் இனத்தவர்கள்.

பிரன்சின் வடக்குக் கரையோரமாக புதிய குடியிருப்புகள் உருவாகி விடாமல் தடுக்க அரசு தீர்மானித்துள்ளதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே Calais பகுதியில் தோன்றிய பிரமாண்ட முகாம் போன்று மீண்டும் உருவாகி விடாமல் தடுப்பதற்காக ஏராளமான பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகற்றப்பட்ட அகதிகள் பிரன்சில் புகலிடம் கோர அனுமதிக்கப்படுவார்கள் அல்லது அடையாள சோதனைகளுக்காக பொலிஸ் முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று தெரிகிறது.

-athirvu.in