பாகிஸ்தான் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறிவிடும்!

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் ‘பாகிஸ்தானிய அணு ஆயுதங்கள் – 2018’ என்ற தலைப்பில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், ராபர்ட் நோரீஸ், ஜூலியா டயாமண்ட் ஆகிய 3 பேர் ஒரு அறிக்கை தயாரித்து உள்ளனர். இவர்களில் ஹான்ஸ் கிறிஸ்டன்சென், அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் இயக்குனர் ஆவார்.

அவர்கள் தயாரித்து உள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் தற்போது 140 முதல் 150 அணுகுண்டுகள் வரை இருக்கலாம். இதே வேகத்தில் அந்த நாடு போய்க்கொண்டு இருந்தால், 2025-ம் ஆண்டுவாக்கில் அந்த நாட்டிடம் 220 முதல் 250 அணுகுண்டுகள் வரை சேர்ந்துவிடும். இது நடந்துவிட்டால், பாகிஸ்தான் உலகின் 5-வது பெரிய அணுசக்தி நாடாக மாறி விடும்” என கூறி உள்ளனர்.

பாகிஸ்தான் எத்தனை அணுசக்தி திறன் கொண்ட லாஞ்சர்களை நிறுத்துகிறது, இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாடு அணுகுண்டுகள் கையிருப்பை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-https://athirvu.in