பாரிஸில் கத்தியை கொண்டு தாக்குதல்: 7 பேர் காயம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கத்தி மற்றும் இரும்பு கம்பி கொண்டு ஒருவர் தாக்குதல் நடத்தியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் அதில் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என பாரிஸ் நகர போலீஸார்தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். இது பயங்கரவாத நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

பாரிஸின் வட கிழக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதல் நடத்தியவர் முதலில் இரண்டு ஆண்களையும், பெண் ஒருவரையும் கத்தியால் குத்த தொடங்கியுள்ளார்.

தாக்குதல் நடந்த இடத்தில் பலர் பெண்டக் என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர் எனவே தாக்குதல்தாரியை பந்தை வைத்து தாக்கியுள்ளனர்.

உடனடியாக தாக்குதல்தாரி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின் வேறோரு இடத்தில் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவரை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து வருகிறோம் என்றும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் பிரிட்டனின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

“இந்த தருணத்தில் இது பயங்கரவாத தாக்குதல் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை” என ஃபிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாரிஸ்

-BBC_Tamil