மீட்கப்பட்ட குடியேறிகளின் புகலிட கோரிக்கைகள் சரிபார்க்கப்படும் வரை, கடற்கரையிலேயே அவர்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாட்டின் உள்துறை அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடல் வழியாக அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு, நூற்றுக்கணக்கான குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வர முயற்சிக்கின்றனர்.
கப்பலில் முறையாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் மீதமுள்ள நபர்கள் மூன்றாம் நாடுகளுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவார்கள் என்றும் அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவித்தனர்.
இந்நிலையில், மனித உயிர்களை பாதுகாப்பதே பிரதான முயற்சியாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. -BBC_Tamil