பிடி-யில் இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்க RM500,000 ஒதுக்கீடு

போர்டிக்சனில் (பி.டி.) இராணுவ வீரர்களின் வீடுகளைப் பழுது பார்க்கவும் அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உள்கட்டமைப்புகளைச் செய்யவும் பாதுகாப்பு அமைச்சு RM500,000-ஐ ஒதுக்கீடு செய்துள்ளது.

நேற்று, அவ்வமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபு இராணுவத் தள மையத்திற்கு (புசாஸ்டா) நேரிடையாக மேற்கொண்ட ஒரு பயணத்திற்குப் பின்னர் அந்த அறிவிப்பைச் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

-பெர்னாமா