சீனாவில் மேலும் 4000 ஆபாச இணையத் தளங்களுக்குத் தடை

சமூக சீரழிவுக்கு வழிவகுக்கின்றன என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சீன அரசு ஆபாச, வன்முறைத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மேலும் 4000 இணையத் தளங்களை முடக்கியுள்ளது.

ஏற்கனவே இணையத்தை சுத்தப் படுத்துவது தொடர்பாக 3 மாத காலமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்த சீன அரசு அதன் பின்னர் வன்முறையைத் தூண்டக் கூடியதும், ஆபாசத் தகவல்கள் அடங்கியதுமான இணையத் தளங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் ஆரோக்கியமான, தூய்மையான இணையத் தள இலக்கியத்தை உருவாக்கும் நோக்கில் சீனா செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக இவ்வருட ஆரம்பத்தில் சுமார் 22 000 ஆபாச இணையத் தளங்களை சீனா முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இணைய சுத்தமாக்கும் பணி சீனாவின் தேசிய சட்ட விரோத, ஆபாசத்துக்கு எதிரான மாநில அமைச்சினால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

-4tamilmedia.com