பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அர்ஜென்டினா பொருளாதாரத்தையும் அதன் சந்தையையும் விரைவாக மீட்க ஏற்கெனவே முடிவு செய்த தொகையைவிட அதிகமாக நிதியளிக்க உலக நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.
36 மாத நிதி தொகுப்பாக அந்நாட்டிற்கு 57.1 பில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக 50 பில்லியன் டாலர்கள் அளிக்க முடிவு செய்திருந்தது உலக நாணய நிதியம். அர்ஜென்டினா நாணய மதிப்பு மோசமான சரிவை சந்தித்திருக்கிறது. வறட்சியின் காரணமாக விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. -BBC_Tamil