நைஜர் நாட்டில் காலரா வியாதி பாதிப்பிற்கு 67 பேர் உயிரிழப்பு

நியாமி, நைஜர் நாட்டின் சுகாதார அமைச்சக தகவலின் அடிப்படையில் ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலையில் இருந்து காலரா வியாதியால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நைஜீரியா நாட்டு எல்லைக்கு அருகே தெற்கு மராடி பகுதியில் இது அதிகம் பரவியுள்ளது.  இங்கு 55 பேர் பலியாகி உள்ளனர்.  தெற்கே டோஸ்சோ, மேற்கே தஹவுவா மற்றும் மத்திய பகுதியான ஜிந்தர் ஆகிய நகரங்களிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் இருந்து இதுவரை 500 பேர் சத் ஏரி பகுதியில் காலராவால் உயிரிழந்து உள்ளனர் என ஐ.நா. அமைப்பு சமீபத்தில் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

-dailythanthi.com