அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் கர்பால் சிங், தங்கள் தரப்புச் சாட்சிகளாக எழுவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்ளப்போவதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். அந்த எழுவரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகமட் ரோட்வான் முகமட் யூசுப் ஆகியோரும் அடங்குவர்.
அன்வார் குற்றம்சாட்டப்பவருக்கான கூண்டிலிருந்து 32-பக்க வாக்குமூலம் ஒன்றை வாசித்து முடித்த பின்னர் கர்பால் இதனைத் தெரிவித்தார்.
கடந்த வாரம் மேற்சொன்ன நால்வரையும் எதிர்த்தரப்பு நேர்காணலுக்காக அழைத்திருந்தது.
நேர்காணலுக்கு வந்த அவர்கள் எதிர்த்தரப்பின் கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டனர்.