செல்போனில் 20 – 30 நிமிட நேரம் தொடர் பேச்சு: 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மின்கதிர்வீச்சு பேராசிரியர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர். அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாம் பயன்படுத்தும் செல்போனுக்காக லட்சக்கணக்கான செல்போன் கோபுரங்கள் மற்றும் வீடுகள் தோறும் இணைக்கப்பட்டுள்ள வை-பை போன்றவை 24 மணி நேரமும் கதிர்வீச்சுகளை வெளியேற்றுகின்றன. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மனிதர்களை மிகவும் பாதிக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

ஒருவர் 20 முதல் 30 நிமிட நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தினால் அவருக்கு 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. 1985-ம் ஆண்டு செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருகிறது என ஆய்வில் தெரியவருகிறது.

பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளில் குழந்தைகள் 12 வயது வரை செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சுக்கு ஆளாகும் நிலை உள்ளது என பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகி உள்ளது.

-dailythanthi.com