சவுதி எம்பாசிக்கு உள்ளே கொலை- உலகை அதிரவைத்துள்ள விடையம் இதுதான் !

துருக்கியின் தலைநகர் இஸ்தான் புல்லில் சவுதி அரேபியாவின் உயர்ஸ்தானிகர் ஆலயம் உள்ளது. அங்கே அனுமதி பத்திரம் ஒன்றை பெறச் சென்ற சவுதி நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் அந்த கட்டத்தில் இருந்து வெளியே வரவில்லை என்று அவரது காதலி துருக்கி பொலிசாருக்கு முறைப்பாடு செய்தார். இருப்பினும் வெளிநாட்டு தூதுவராலயத்தை நோட்டமிடவோ இல்லை விசாரிக்கவோ துருக்கி பொலிசாரால் முடியாது. இது இவ்வாறு இருக்க உள்ளே சென்ற ஊடகவியலாளரை அடித்துக் கொலை செய்துள்ளார்கள் சவுதி அரேபிய அதிகாரிகள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு வேலைபார்பதால், உடனே அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இவ்விடையத்தில் மூக்கை நுளைத்து துப்பு துலக்க, மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் மோதிக் கொள்ளும் அளவு பிரச்சனை பூதாகரமாகியுள்ளது. இஸ்தான் புல்லில் அமைந்துள்ள சவுதி நாட்டு தூதுவராலயத்திற்கு முன்னால் உள்ள தனியார் கடை ஒன்றில் CCTV பொருத்தப்பட்டுள்ளது. இதனை சி.ஐ.ஏ உளவு நிறுவனம் எப்படியோ பெற்றுக்கொண்டுவிட்டது. அந்த வீடியோவில் ஒரு வேனில் சிலர் வந்து இறங்கியதும். அவர்கள் சவுதி நாட்டு எம்பாசிக்குள் சென்று. பின்னர் திரும்பிச் செல்வதும் பதிவாகியுள்ளது. இவர்கள் அனைவரும் சவுதி நாட்டை சேர்ந்த குண்டர் படை.

இவர்களை சவுதி உயர்ஸ்தானிகர் வரவளைத்து, குறித்த ஊடாகவியலாளரை கேள்வி கேட்டு தனக்கு தேவையான விடையங்களை பெற்றுக்கொண்டு பின்னர் அடித்துக் கொலை செய்துள்ளார்கள். ஊடகவியலாளர் அலறும் சத்தம் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ள நிலையில். ஊடகவியலாளர் கட்டி இருந்த ஆப்பிள் வாட்சில் அவர் அனைத்தையும் பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, பதிவு செய்து ஐ-கிளவுட் க்கு தரவேற்றப்பட்ட சில ஒலி நாடாக்களை சவுதி நாடு அழித்துள்ளது. இது அதிபர் டொனால் ரம்பை மேலும் ஆத்திரமடையவைத்துள்ளது. இதனால் முழு அளவிலான சர்வதேச விசாரணை நடைபெறவேண்டும் என்று டொனால் ரம் கூறியுள்ள நிலையில். சவுதி அரசு மீது வீண் பழி போடவேண்டாம் என்றும். சவுதி அரசின் இறையாண்மை மேல் விளையாட வேண்டாம் என்றும், அன் நாட்டு அரசரும் அதிபருமான சல்மா கடுமையான கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது காதலியை சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்ல என ஆவணங்களை கொடுக்கச் சென்ற ஊடகவியலாளரை சவுதி நாட்டு தூதுவராலயத்தினுள் வைத்தே கொலை செய்த விடையம் சர்வதேச மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படியும் நடக்குமா என்று சாதாரண மக்கள் ஆச்சரியப்படும் வகையில் இக்கொலை இடம்பெற்றுள்ளது.

-athirvu.in