காசா, இஸ்ரேல் உருவானபோது நடந்த போரில், நாட்டை விட்டு வெளியேறிய பாலஸ்தீனியர்கள் அனைவரையும் மீண்டும் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் பாலஸ்தீனியர்கள் ‘கிரேட் மார்ச் ஆப் ரிட்டர்ன்’ என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு காசாமுனை பகுதியில் பாலஸ்தீனியர்கள் நேற்று முன்தினம் அமைதி ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை உயர் தேசிய கமிட்டியினர் செய்திருந்தனர்.
இதற்காக அங்குள்ள கடற்கரையில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரண்டனர். அவர்கள் காசா நீர் எல்லைக்கு செல்வதற்காக படகுகளில் ஏறினர். அப்போது இஸ்ரேல் கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 24 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்த பிரச்சினையில், சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, வறுமையில் வாடுகிற 20 லட்சம் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேல் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உயர் தேசிய கமிட்டியினர் வலியுறுத்தி உள்ளனர்.
-dailythanthi.com