கனடாவிலும் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது..

உருகுவே நாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இதனால் உலகிலேயே சட்டப்பூர்வமாக போதை மருந்தை பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக மருந்து கடைகளில் கிடைக்க அனுமதிக்கும் முதல் நாடாக தென் அமெரிக்க நாடான உருகுவே மாறியது.

இந்நிலையில் கனடாவும் கஞ்சா (cannabis) விற்பனையை சட்டப்பூர்வமாக்கியது. இதனால் உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு முதல் பொழுதுப்போக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன்மூலம் கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்கிய 2-வது நாடு என்ற பெயரை கனடா பெற்றுள்ளது.அரசின் அங்கீகாரம் பெற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள் கஞ்சா எண்ணெய், விதை, தாவரம் மற்றும் உலர்ந்த கஞ்சா ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம். 30 கிராம் உலர்ந்து கஞ்சா வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் மற்றும் மாநிலங்கள் அவர்களது அதிகார வரம்பிற்குள் கஞ்சா வாங்கப்படும் இடங்கள் குறித்த தெளிவான புள்ளி விவரங்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.நியூபவுண்ட்லேண்ட், லேப்ராடார் ஆகிய மாகாணங்களில் அதிகாரப்பூர்வமாக கஞ்சா விற்பனை தொடங்கியுள்ளது.

-athirvu.in