அமெரிக்காவின் புளோரிடா, விர்ஜினியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் நுழைந்த ‘மைக்கேல்’ அங்கும் பெரும் சேதம் உண்டாக்கியது.
பின்னர், வடக்கு கரோலினா, ஜார்ஜியா ஆகிய மாநிலங்களை சூறையாடிய மைக்கேல் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகப்படியாக புளோரிடாவில் 20 பேர் உயிரிழந்தனர். விர்ஜினியாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் 3 பேரும், ஜார்ஜியா மாநிலத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-athirvu.in