700 பேரை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்; கொலை செய்யப்போவதாக மிரட்டல்!

அமெரிக்க மற்றும் ஐரோப்பியர்கள் உட்பட 700 பேரை பணயக் கைதிகளாக ஐ.எஸ் பயங்கரவாதிகள் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கிழக்கு சிரியாவில் உள்ள அகதி முகாமில் இருந்து குறித்த 700 பேரையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றால் ஒவ்வொரு நாளும் பத்து பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியவாத பயங்கரவாதிகள் ஏற்கனவே பல பணயக்கைதிகள் படுகொலை செய்துள்ளனர். தினசரி மரண தண்டனை பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர் என ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ் பயங்கரவாதிகள் கடந்த வாரம் சிரியாவின் Deir-al Zor மாகாணத்தில் அகதி முகாம்களை தாக்கி, பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 130 குடும்பங்களை கடத்திச் சென்றுள்ளனர்.

Valdai கலந்துரையாடலில் பேசிய புட்டின், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால் அவர்கள் என்னவென்று தெளிவுபடுத்தவில்லை. ஆனாலும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஒவ்வொரு நாளும் பத்து பணயக் கைதிகள் கொல்லப்படுவார்கள என எச்சரித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பத்துப் பேரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது மிகவும் அபாயரமான பயங்கரவாதம், பேரழிவு என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

-athirvu.in