பூட்டானில் புதிய கட்சி ஆட்சி அமைக்கின்றது!

இமய மலைத் தொடரில் அமைந்துள்ள இராச்சியமான பூட்டானில் அண்மையில் நடைபெற்ற ஜனநாயக் தேர்தலில் அந்நாட்டு வாக்களர்கள் புதிய கட்சி ஒன்றுக்கு வாக்களித்து ஆட்சி அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

2008 ஆமாண்டு பூட்டானில் அரச வம்ச ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதன் முறையாக அண்மைய தேர்தலில் DNT எனப்படும் மத்திய இடதுசாரி ட்ருக் ந்யாம்ருப் ஷொக்பா என்ற கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.

சுமார் 800 000 சனத் தொகை கொண்ட சிறிய நாடான பூட்டான் ஆசியாவின் இரு பெரும் வல்லரசுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இமய மலைத் தொடர்களுக்குள் அமைந்துள்ளது. 2013 ஆமாண்டு ஆரம்பிக்கப் பட்ட DNT கட்சி அண்மைய தேர்தலில் 47 ஆசனங்களிலும் 30 ஐ வென்று பெரும்பான்மை அரசு அமைக்கின்றது. ஏனைய 17 ஆசனங்களையும் DPT எனப்படும் ட்ருக் புவென்சும் ஷொக்பா கட்சி பெற்றுள்ளது.

50 வயதாகும் DNT தலைவர் லோட்டாய் ஷெரிங் பங்களாதேஷிலும், அவுஸ்திரேலியாவிலும் அரசியல் பயிற்சி எடுத்தவர் ஆவார். இவர் அதிகளவு வெளிநாட்டுக் கடன் (முக்கியமாக இந்தியவிடம் இருந்து..), இளவயதினருக்கான வேலை வாய்ப்பு, கிராமப்புற வறுமை மற்றும் கிரிமினல் குழுக்கள் போன்ற விடயங்களுக்கு எதிராக நாட்டைக் கட்டி எழுப்புவேன் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

-4tamilmedia.com