சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம்மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.
மேலும்,சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தின.
இந்நிலையில், சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து 1411 குடியிருப்பு பகுதிகள் உள்பட 95 சதவீதம் நிலப்பரப்பு மீட்கப்பட்டதாகவும், இதற்கான தாக்குதலில் 87 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களை ரஷியப் படையினர் கொன்றதாகவும் ரஷிய ராணுவ மந்திரி செர்கே ஷோய்கு தெரிவித்துள்ளார்.
-athirvu.in