‘ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாக நேரும்’

அமெரிக்காவின் ஆயுதங்களை நிலை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் இடம் அளித்தால், ரஷ்யா அதற்கு ஏற்ற வகையில் பதில் அளிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

அவ்வாறு அமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

1987இல் கையெழுத்தான சோவியத் கால அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் இருந்து அமெரிக்கா சமீபத்தில் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பனிப்போர் காலத்துக்குப் பின் தங்கள் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை நேட்டோ நாடுகளும் வியாழன்று தொடங்கியுள்ளன. -BBC_Tamil