ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல்! 68 பேர் பலி!

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

கிளர்ச்சியாளர்களில் சிலர் அமெரிக்க படைகளுக்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, உள்நாட்டுப் போரால் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ள சிரியா நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

-athirvu.in