இரத்த தானம் ஆயுளை கூட்டும்..

இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.

 

‘இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம், ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம், ஆயுளையும் அதிகரிக்க செய்யும். தொடர்ந்து ரத்த தானம் செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு வாழ்நாளை நீட்டிக்க செய்யும். நோய் எதிர்ப்பு மண்டல அமைப்பையும் வலுப்படுத்தும்.

இரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உற்பத்தியாகும். அப்படி ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறும். உடலில்இருந்து கார்பன் டை ஆக்ஸைடை நீக்கவும் உதவும். ஒருமுறை ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து 650 கலோரி செலவாகும். அதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

அதே வேளையில் ரத்ததானம் செய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பை பெற்றிருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். ரத்ததானம் செய்வதற்கு முன்பு நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ஹுமோகுளோபின் அளவு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி. பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.

-athirvu.in