கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு

ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகளால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேரும், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவரும் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர்.

அவர்களை கடத்தியதற்கான காரணம் மற்றும் பயங்கரவாதிகளின் கோரிக்கை குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

-athirvu.in