குவைத்சிட்டி: குவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது.
முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டான் தூதரகத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கனமழையால் குவைத் நகரில் கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பாதுகாப்புபடையும் ஈடுபட்டு வருகின்றன.
வெள்ள மீட்பு பணிகளில் முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க வில்லை என குவைத் பொது பணித்துறை அமைச்சர் மீது புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-dinamalar.com