கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் யேமெனில் 110 ஹௌத்தி கிளர்ச்சியாளர்களும் 31 போராளிகளும், பொது மக்களும் என கிட்டத்தட்ட 149 பேர் யேமென் மோதலில் பலியாகி உள்ளதாக ஹொடெய்டா இலுள்ள வைத்தியசாலைகளின் மருத்துவர்களும் இராணுவத் துறையினரும் தகவல் அளித்துள்ளனர்.
முக்கிய துறைமுக நகரம் ஒன்றில் 7 பொது மக்கள் பலியாகி இருப்பதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்காத இராணுவ வட்டாரம் ஒன்று உறுதிப் படுத்தியுள்ளது. இவ்வாறு அதிகளவில் யெமெனில் பொது மக்கள் பலியாகி வர சவுதி தலைமையிலான கூட்டணி வளைகுடா நாடுகள் யேமென் மீது பன்முனை வான் தாக்குதலைத் தீவிரப் படுத்தி வருவதே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
-4tamilmedia.com