கனேடிய வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினார் பிரதமர் ட்ரூடோ

கடந்த 1939ஆம் ஆண்டு கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாசிசக் கொள்கையாளர்களிடமிருந்து தங்கள் உயிர்களை பாதுகாக்கும் முகமாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர்.

அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக கனடாவுக்குள் புகலிடம் கோரி நுழைய முற்பட்ட வேளையில், கனடாஅவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

குறித்த சம்பவத்திற்காக தான் வருந்துவதாகவும் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோருவதாகவும் நேற்று (புதன்கிழமை) கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும், கனேடிய வரலாற்றில் அந்நாடு புரிந்த தவறுகள் அனைத்திற்கும் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.

கடந்த 1914ஆம் ஆண்டிலிருந்து கோமகதா மாரு குழுவினர், ஜப்பானிய சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என பலதரப்பினர் கனடாவுக்கு புகலிடம் கோரி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-tamilcnn.lk