தேர்தல் நீதிமன்றம் நெகிரி செம்பிலான், ரந்தாவ் தொகுதி காலியானதாக அறிவித்தது. அங்கு 14வது பொதுத் தேர்தலில் முன்னாள் மந்திரி புசார் முகம்மட் ஹசான் வெற்றி பெற்றது செல்லாது என்று முடிவு செய்த நீதிமன்றம் புதுத் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.
ஒரு வேட்பாளரோ அவரை முன்மொழிபவரோ அல்லது வழிமொழிபவரோ வேட்புமனு மையத்துக்குள் நுழைய ‘பாஸ்’ வைத்திருக்க வேண்டும் என்று எழுதப்பட்ட விதி எதுவும் கிடையாது என நீதிபதி அஸிமா ஒமார் தம் தீர்ப்பில் கூறினார்.