இன்று காலை ஷா ஆலமில் பிகேஆர் இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்கள் ஜோகூர் பாரு எம்பி அக்மால் நாசிருக்குப் பாராட்டுத் தெரிவித்ததைக் காண முடிந்தது. அவர் இளைஞர் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டாராம்.
அதிகாரப்பூர்வ முடிவு இன்று மாலை மணி 5.25க்குத்தான் அறிவிக்கப்படும். ஆனாலும் அஃபிப் பாஹார்டினை 50 வாக்குகள் வேறுபாட்டில் அக்மால் வென்று விட்டார் என்பதே பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் முழுக்க பேச்சாக இருந்தது.
அக்மால், அஃபிப் இருவரையும் ஊடகங்கள் அணுகியபோது இருவருமே கருத்துரைக்க மறுத்து விட்டனர்.
அதிகாரப்பூர்வமற்ற முடிவைக் கேட்டுவிட்டுப் பேசுகிறார்கள் என்றார் அக்மால்.
அஃபிப், “தேர்தல் குழு முடிவை அறிவிக்கும்வரை காத்திருப்போம்”, என்றார்.