சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதல்களில் அமெரிக்கா ஆதரவு பெற்ற குர்து படையைச் சேர்ந்த 47 பேர் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினர் (சிரிய ஜனநாயக படை) மற்றும் கிளர்ச்சி படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈராக் எல்லையை ஒட்டியுள்ள டீர் எஸ்ஸார் மாகாணத்தில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை விரட்டியடிப்பதற்காக தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐஎஸ் பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
அவ்வகையில், அல் பஹ்ரா மற்றும் கரானிஜ் கிராமங்கள் மற்றும் சிரிய ஜனநாயக படையின் கட்டுப்பாட்டில் உள்ள அல் தனக் எண்யெய் வயல் அருகில் சனிக்கிழமை முதல் ஐஎஸ் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-athirvu.in