ரஷ்யாவுடன் மோதல்: கடற்படைக் கப்பல்களை அனுப்ப நேட்டோ-வை வலியுறுத்தும் யுக்ரேன்

க்ரைமியாவுடன் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட கடற்படை மோதலையடுத்து, அசவ் கடலிற்கு கப்பல்களை அனுப்ப யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ நேட்டோவை வலியுறுத்தி உள்ளார்.

“யுக்ரைனிற்கு உதவவும் மற்றும் பாதுகாப்பு வழங்கவும்” கடற்படை கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என நம்புவதாக ஜெர்மனியின் பில்ட் நாளிதழுக்கு அவர் கூறியுள்ளார்.

உறுப்பினர் நாடல்லாத யுக்ரைனிற்கு “முழு அதரவை” நேட்டோ வெளிப்படுத்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டில் நாட்டில் நடக்கவுள்ள தேர்தலில் தனது வாய்ப்புகளை அதிகரிக்க யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட்டதாக அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று க்ரைமியா கடல் பகுதியில் ரஷ்யாவின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் எஃப்எஸ்பி எல்லை படையினர் யுக்ரேனின் கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை கைப்பற்றினர்.

ரஷ்யாவில் புதன்கிழமையன்று நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், ”எல்லையில் நிலவும் சூழலை மேலும் பதட்டமாக வைத்திருக்க அவர் ஏதாவது செய்தாக வேண்டும்” என்று யுக்ரேன் அதிபரை குறிப்பிட்டு புதின் பேசினார்.

யுக்ரேன் -ரஷ்யா மோதல்: 'தேர்தலில் ஆதாயம் பெற நடத்தப்பட்ட நாடகம்' - புதின் குற்றச்சாட்டு

ரஷ்யாவின் தாக்குதல் நடவடிக்கையை ‘ஆக்ரமிப்பு தாக்குதல்’ என்று யுக்ரேன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் பதட்டம் தொடர்பாக மிகவும் கவலை அடைவதாக இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணையம், ராணுவ பலத்தை ரஷ்யா பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால், ரஷ்யா மீது எவ்விதமான தடைகளையும் ஐரோப்பிய ஆணையம் விதிக்கவில்லை.

இந்த சம்பவம் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பழி சுமத்தியுள்ளன.

ரஷியா

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது மூன்று கடற்படை கப்பல்கள் மற்றும் 23 பணியாளர்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து யுக்ரேன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் எல்லை பகுதியில் ஒரு புதிய ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரஷ்யா தாக்குதல் நடத்த சாத்தியமான எல்லை பகுதிகளுக்கு இந்த புதிய 30-சட்டம் பொருந்தும் என்று யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்தார்.

இந்த புதிய சட்டத்தின்படி போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை அதிகாரிகள் தடுக்கலாம். ராணுவ பணியாற்ற மக்களுக்கு அரசு உத்தரவிடலாம்.

‘புதினுடனான சந்திப்பு ரத்தாகலாம் ‘ – டிரம்ப்

முன்னதாக, க்ரைமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து ராணுவச் சட்டம் கொண்டுவருவது குறித்து யுக்ரைன் நாடாளுமன்றம் ஆலோசித்தது.

இதனிடையே, ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதாக இருந்த தனது திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

புதினுடனான சந்திப்புக்கு ரத்தாகலாம் - டிரம்ப்

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியது குறித்த முழு தகவல் அறிக்கையை படிப்பதற்கு தான் காத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் வெய்னோ ஐரிஸில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்திப்பதாக இருந்தது.

யுக்ரேன் – ரஷ்யா பிரச்சனை குறித்து தனது தேசிய பாதுகாப்பு குழு அளிக்கவுள்ள அறிக்கை விரிவாகவும், முடிவை தீர்மானிக்கும் விதமாகவும் அமையும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

”ஒருவேளை நான் புதினை சந்திக்காமல் போகலாம். ரஷ்யாவின் இந்த ஆக்ரமிப்பு தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இந்த ஆக்ரமிப்பு நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை” என்று டிரம்ப் தெரிவித்தார். -BBC_Tamil