ரஷ்ய ஆண்கள் யுக்ரேனுக்குள் நுழைய தடை

ராணுவச் சட்டம் அமலில் இருக்கும்போது 16 முதல் 60 வயது வரையிலான ரஷ்ய ஆண்களை யுக்ரைன் தன் நாட்டிற்குள் அனுமதிக்காது என்று எல்லை பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

“மனிதநேய அடிப்படைகளில்” மட்டும், அதாவது இறுதிச்சடங்கு போன்ற காரியங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எல்லையை பகிர்ந்துள்ள 10 பிராந்தியங்களில் ஒரு மாதகாலத்திற்கு ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில், கருப்புக்கடலில் 3 யுக்ரேனிய கப்பல்கள் மற்றும் 24 மாலுமிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றியதையடுத்து பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. -BBC_Tamil