வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு, வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கு அரசு ஒப்புதல் பெறுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றை வரைந்து வருகிறது.
இதனைத் தெரிவித்த அதன் அமைச்சர் ஜுரைடா கமருடின், அச்சட்டத்தின்படி இப்போதுள்ள வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
“சொந்த நிலத்தில் அமைந்திராத வழிபாட்டுத் தலங்களை இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படும்”, என்றாவர்.
அம்பாங் எம்பியுமான ஜுரைடா, வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கென நடைமுறைகள் இருப்பது அவசியம் என்றார்.