பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் மசீச-வில் தீர்மானம்

இன்று மசீச ஆண்டுக் கூட்டத்தில் பிஎன்னைக் கலைக்கவும் புதிய கூட்டணி அமைக்கவும் கட்சிக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய கூட்டணி பொருத்தமான நேரத்தில் உருவாக்கப்படும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.

நிறைய கருத்துப் பரிமாற்றத்துக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்துக்குக் கூட்டத்தில் கலந்து ஒரே ஒருவரைத் தவிர பேராளர்கள் அனைவருமே கரம் உயர்த்தி ஒப்புதல் அளித்ததாக வீ கூறினார்.

தீர்மானத்தை எதிர்த்த அந்த ஒருவர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.