சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருநாட்டு எல்லைகளில் உள்ள மலைப்பகுதிகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்களை வேட்டையாட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தரைவழியாகவும் வான்வழியாகவும் அதிரடியாக தாக்குதல் நடத்துகின்றன.
அவ்வகையில், கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹேல்மன்ட் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தலிபான் இயக்கத்தின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், சிரியா நாட்டில் நேற்று அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அல் உமரய்ன் என்பவர் கொல்லப்பட்டதாக கூட்டுப்படையின் செய்தி தொடர்பளர் சீன் ரியான் இன்று தெரிவித்துள்ளார்.
இடதுபுறம்: அமெரிக்க வீரர் பீட்டர் கசிக்
கூட்டுப்படைகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிவந்த அபு அல் உமரய்ன், அமெரிக்க ராணுவ வீரர் பீட்டர் கசிக் கொல்லப்பட்டதில் தொடர்புடையவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ரஷியா படைகளின் துணையுடன் பல பகுதிகளில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் போராளிகள் குழுவை சேர்ந்த சுமார் 270 பேர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் இன்று அறிவித்துள்ளது.
-athirvu.in