ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்குட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு ஆவேசமாக தாக்குதல் நடத்தினர்.
அவர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட 14 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை அள்ளிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
-athirvu.in