லிபியாவில் பணயக்கைதிகள் 6 பேரை படுகொலை செய்த ஐஎஸ் பயங்கரவாதிகள்..

லிபியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி பணயக் கைதிகளாக வைத்திருந்த 6 பேரை ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர்.

இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு 10 பேரை பயங்கரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர். நகரை விட்டு வெளியேறும் முன்பாக பல்வேறு ராணுவ வீரர்களை கொன்றதாகவும், சிலர் கடத்திச் சென்றதாகவும் ஐஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடத்தப்பட்ட 10 பேரில் 6 பேரை பயங்கரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். இதனை மாவட்ட அதிகாரி உறுதி செய்தார்.

ஐஎஸ் அமைப்பிடம் உள்ள பணயக் கைதிகள் மற்றும் ராணுவத்திடம் உள்ள பயங்கரவாதிகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்வது தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

-athirvu.in