நூற்றுக் கணக்கான டாங்கிகளை யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு அனுப்பியது ரஷ்யா ..

நூற்றுக் கணக்கான யுத்த டாங்கிகளை , யூக்கிரேன் நாட்டு எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. அதிபர் புட்டினின் நேரடி உத்தரவில் இது இடம்பெற்றுள்ளது என தெரிய வருகிறது. கடந்த வருடம் யூக்கிரேன் நாட்டில் உள்ள கிரீமியா என்னும் மாநிலத்தை ரஷ்யா தனதாக்கிக் கொண்டது. அன்று முதல் இன்று வரை யூக்கிரேன் நாட்டின் மீது என் நேரமானாலும் போர் தொடுக்க ரஷ்யா தாராக உள்ளது. இதனை நேட்டோ நாடுகள் கடுமையாக எதிர்த்து. அமெரிக்கா, பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகள் தமது நாட்டு படையை யூக்கிரேன் அனுப்பி, ரஷ்யாவிடம் இருந்து பாதுகாத்து வருகிறது.

இன் நிலையில் நேற்று முன் தினம்(9) ரஷ்ய உளவு விமானம் ஒன்று யூக்கிரேன் வான் பரப்பில் நுளையவே அதனை நேட்டோ படையினர் விரட்டி அடித்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா யூக்கிரேன் கடல் பரப்பில் வைத்து அன் நாட்டு சிறிய போர் கப்பல் ஒன்றை ஏவுகணை கொண்டு தாக்கியுள்ளது. இதனை அடுத்து பெரும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதன் ஒரு அங்கமாக தனது படை பலத்தை காண்பிக்க ரஷ்யா தற்போது நூற்றுக் கணக்கான யுத்த வாகனங்களை எல்லைக்கு அனுப்பி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

-athirvu.in