வாஷிங்டன்: ஜமால் கசோகி என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் கொலை செய்யப்பட்டார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்த நாகரிகமான விமர்சகர் கசோகி. அவரை விமர்சித்ததற்காக கசோகி துருக்கியின் இஸ்தான்புல்லில் கொலை செய்யப்பட்டார்.
இதில் இளவரசக்கு உள்ள தொடர்பு ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி கூறியது.ஆனால் சவுதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபை கூட்டம் நடந்தது. இதில் ஏமனுக்கு ராணுவ உதவியை நிறுத்தவது,பத்திரிகையாளர் கசோகி கொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தான் முழு பொறுப்பு உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
-dinamalar.com

























