ஆகக் கடைசியாக அம்னோவிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தானா மேரா எம்பி இக்மால் ஹிஷாம் அப்துல் அசீஸ் ஆவார். அம்னோவிலிருந்து வெளியேறுவதாக அவர் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.
தானா மேரா தொகுதித் தலைவருமான இக்மால், தொகுதி மக்களின் நலனை முன்னிறுத்தி இம்முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
இக்மால் கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தொடர்ந்து அம்னோவுக்கு இப்போது நாடாளுமன்றத்தில் 43 எம்பிகள்தான் உள்ளனர். மே மாத 14வது பொதுத் தேர்தலிலிருந்து இதுவரை 10 எம்பிகள் அக்கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.