கெய்ரோ : 4,400 ஆண்டு பழமையான பிரமீடை எகிப்து தலைநகர் கெய்ரோவில் வெளிப்படுத்தியுள்ளனர்.
மன்னர் நெபெரிர்கரே ககய் காலத்தில் இந்த பிரமீடில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு, வரைபடங்களால் ஆன எழுத்தோவியங்களும், சிற்பங்களும் உள்ளன. 5 சுரங்க வாயிற்குழி கதவுகளில் ஒன்று கூட இதுவரை திறக்கப்பட்டு களவாடப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீலிடப்படாத ஒன்றை மட்டும் திறந்தபோது குப்பைகள் மட்டுமே இருந்ததாகவும், எஞ்சியுள்ளவற்றில் பதப்படுத்தப்பட்ட உடல், இறந்தவர் பயன்படுத்திய ஆடை, அணிகலன், உள்ளிட்டவை இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
-dinamalar.com