தேர்தல் ஆணையத் தலைவர் அஸ்ஹார் அசிசான் ஹருன் கேமரன் மலை இடைத் தேர்தல் ஜனவரி 26-இல் என்று இன்று அறிவித்தார்.
தேர்தல் பரப்புரைக்கு 14 நாள்கள் கொடுக்கப்படுகின்றன. ஜனவரி 12 வேட்புமனு தாக்கல் செய்யும் நாள். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளும் வாக்களிப்பு நாளும் சனிக்கிழமையில் வருகின்றன.
கேமரன் மலை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் நில அலுவலகம் வேட்பாளர் நியமன மையமாகவும் டேவான் ஜூப்ளி சுல்தான் ஹாஜி அஹமட் ஷா வாக்குகள் எண்ணும் மையமாகவும் செயல்படும் என அஸ்ஹார் கூறினார்.
இடைத் தேர்தலுக்கு ரிம3.5 மில்லியன் அரசாங்கப் பணம் செலவாகும் என்றாரவர்.