பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான 5 ஆவது நாடு இந்தியா! : முதலிடத்தில் ஆப்கான்

இந்த வருடம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 80 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் 49 பேர் தனிப்பட்ட குரோதத்தின் காரணமாக வேண்டுமென்றே கொல்லப் பட்டவர்கள் ஆவர்.

அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று RSF எனப்படும் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது. இதில் இவ்வருடம் 348 மேலதிக பத்திரிகையாளர்கள் தடுத்து வைக்கப் பட்டதாகவும், 60 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்ததாகவும் மேலும் 3 பேர் காணாமற் போயுள்ளதாகவும் கூடத் தெரிய வருகின்றது.

இந்தப் புள்ளி விபரத்தில் ஆப்கானிஸ்தானில் மட்டும் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டதாகவும் அந்நாடு பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நடு என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சிரியாவில் 11 பேர், மெக்ஸிக்கோவில் 9 பேர், யேமெனில் 8 பேர், இந்தியாவில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்தியா இத்தரவரிசையில் 5 ஆவது இடத்திலுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியப் படத்தக்க வகையில் 2003 அமெரிக்க முற்றுகைக்குப் பிறகு முதன் முறையக ஈராக்கில் இவ்வருடம் எந்தவொரு பத்திரிகையாளரும் கொல்லப் படவில்லை.

-4tamilmedia.com