தீயணைப்பு வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமின் இறப்பு கொலை என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நால்வரிடம் மீண்டும் விசாரணை செய்யப்படும் என்று தெரிகிறது.
அவ்வழக்கு தொடர்பில் மேலும் ஆதாரங்களைத் திரட்டும் பணியில் போலீஸ் இறங்கியிருப்பதாக துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார் என த ஸ்டார் அறிவித்துள்ளது.
“அந்நால்வரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுவது உறுதி. வழக்கு கொலை என மறுவகைப்படுத்தப்பட்டிருப்பதால் மேலும் நுணுக்கமான ஆதாரங்கள் தேவைப்படுகின்றன”, என்றாரவர்.
போலீசார் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்திருப்பத்தாகக் கூறிய நூர் ரஷிட், அவ்வழக்கு தொடர்பில் மேலும் சாட்சியம் அளிக்கக் கூடிய பலரும் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் சொன்னார்.